கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட சுமார் 30 இலட்சம் சிகரெட்டுகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை சுங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் கைப்பற்றப்பட்ட சுமார் ஏழரை கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சிகரெட்டுக்களே இவ்வாறு சுங்கத்தினரின் மேற்பார்வையில் அழிக்கப்படவுள்ளன.
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட குறித்த சிகரெட்டுக்கள் ஊடாக சுமார் 48 கோடி ரூபாவுக்கும் அதிகமான வரி ஏய்ப்பு மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.