யக்கல – கம்பஹா வீதியில் நேற்று (01) இடம்பெற்ற வேன் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்பஹாவிலிருந்து யக்கல நோக்கிச் சென்ற வேன் ஒன்று வீதியில் பயணித்த பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யக்கல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயமடைந்த பெண் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
விபத்தின் பின்னர் சாரதி வேனை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை தேடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.