பிறக்காத சந்ததியினர் கடன் சுமையிலிருந்து விடுபட வேண்டும் எனவும், ரணில் விக்ரமசிங்க பின்வாங்காமல் வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டை மீட்டெடுத்தார் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தொம்பே பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று (01) பிற்பகல் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியினால் மக்கள் அவதியடைந்ததாகவும், ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் சரியான தீர்மானங்களினால் மக்களுக்கு நிவாரணம் கிடைத்து வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.