Wednesday, April 30, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமனைவியை கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை

மனைவியை கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை

தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஊவா மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ் இன்று மரண தண்டனை விதித்துள்ளார்.

பதுளை கெந்தகொல்ல கிராமத்தில் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி திஸாநாயக்க முதியன்சேலாகே சந்திரவதி (35) என்பவரை படுகொலை செய்தமைக்காக அவரது கணவர் சுலைமான் தர்மதாசவிற்கு எதிராக பதுளை பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

விசாரணையின் போது இருவருக்கும் இடையில் சில காலமாக குடும்பத்தகராறு இருந்து வந்ததாகவும், மனைவி வேறு தொடர்பு இருப்பது உறுதியானதையடுத்து, இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மனைவியின் காலில் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles