அறுகம்பே, உல்ல கடற்கரையில் விபத்துக்குள்ளான வெளிநாட்டு பிரஜை ஒருவர் அறுகம்பே விசேட அதிரடிப்படை முகாமின் உயிர் காக்கும் அதிகாரிளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
நேற்று (01) உல்ல கடற்கரையில் உள்ள உயிர்காக்கும் கண்காணிப்பு கோபுரத்திற்கு முன்பாக கடற்கரையில் இருந்து 600 மீற்றர் தொலைவில் கடலில் நீராடிக் கொண்டிருந்த இஸ்ரேலிய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார்.
அப்போது, அந்த இடத்தில் பணியில் இருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உயிர் காக்கும் அதிகாரிகள் அவரை காப்பாற்றி, அடிப்படை சிகிச்சை அளித்து அனுப்பி வைத்துள்ளனர்.