நாமல் ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ளார்.
கொழும்பில் முற்பகல் 10 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
நாமல் ராஜபக்ஷ கடந்த வெள்ளிக்கிழமை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கினார்.
இந்த விஞ்ஞாபனம் இலங்கையின் எதிர்காலத்திற்கான நாமலின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கைகளை கோடிட்டுக் காட்டுவதாகவும், முக்கிய பிரச்சினைகளை எடுத்துரைத்து தேசத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான தீர்வுகளை முன்வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.