Saturday, March 14, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு

கொஸ்கொட கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொஸ்கொட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தமையினால் குறித்த நபர் பல நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles