Monday, November 24, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபண மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது

பண மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் போல் நடித்து அடையாள அட்டை மற்றும் போலி ஆவணங்களைக் காட்டி கடையில் இருந்து 10 இலட்சம் ரூபாவை பெற முயன்ற இருவரை அளுத்கம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அளுத்கம தர்கா நகரில் உள்ள கடையொன்றில் நுழைந்த தம்பதியினர், குறித்த கடையின் உரிமையாளர் வரி செலுத்தவில்லை எனவும், 10 இலட்சம் ரூபா நிலுவைத் தொகை இருப்பதாகவும் தெரித்துள்ளனர்.

இது தொடர்பில் கடையின் உரிமையாளர் தனது மகனுக்கு அறிவித்ததையடுத்து, குறித்த தம்பதியினர் மோசடியில் ஈடுபட்டவர்கள் என மகன் அடையாளம் கண்டு, கடையின் உரிமையாளர் மற்றும் அங்குள்ள மக்கள் இணைந்து குறித்த சந்தேக நபர்களை அளுத்கம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles