Wednesday, April 30, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலஞ்சம் பெறச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

இலஞ்சம் பெறச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

மத்துகம பொலிஸில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெறச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மத்துகம பொலிஸில் கடமையாற்றும் மற்றும் மத்துகம நீதிமன்றில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை விடுவிப்பதற்கு உதவியாக இலஞ்சம் வாங்கச் சென்ற போதே பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles