Friday, December 5, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீடொன்றிற்குள் புதையல் தோண்டிய இருவர் கைது

வீடொன்றிற்குள் புதையல் தோண்டிய இருவர் கைது

அம்பாறை,கரங்கம பிரதேசத்தில் மிக நுணுக்கமான முறையில் அகழ்வு இயந்திரங்களை பயன்படுத்தி வீடொன்றிற்குள் புதையல் தோண்டிய இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அரந்தலாவ விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரங்கம பகுதியில் நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த 43 மற்றும் 47 வயதுடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தண்ணீர் மோட்டார், ஒரு ஹில்டி, வயர் கோட்கள் உள்ளிட்ட தோண்டும் கருவிகள் பலவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles