Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்துகம ஷானின் பிரதான சீடன் இலங்கைக்கு

மத்துகம ஷானின் பிரதான சீடன் இலங்கைக்கு

டுபாயில் கைது செய்யப்பட்டு கொலை, கப்பம் பெறுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக பிடியாணை பெற்றிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த டொன் கிட்மால் பினோய் டில்ஷான் இன்று (29) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட அதிகாரிகளால் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

33 வயதான அவர், அண்மையில் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் டுபாயிலிருந்து இன்று 05.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இவர் ‘மத்துகம ஷான்’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவனின் பிரதான சீடன் எனத் தெரியவந்துள்ளது.

நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட அவர் மேலதிக விசாரணைகளுக்காக மத்துகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles