ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நேற்று (29) வரை 1,229 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 1,172 முறைப்பாடுகளும், வன்முறைச் செயல்கள் தொடர்பாக 4 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.