க்ளப் வசந்த படுகொலை தொடர்பில் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
க்ளப் வசந்த கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கும் கார் சாரதிக்கும் உதவிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 8ஆம் திகதி அத்துருகிரியில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் வைத்து இந்நாட்டின் பிரபல வர்த்தகரான க்ளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் கொலை செய்யப்பட்டனர்.