அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு சம்பளம் அதிகரிக்கப்படும் எனவும், அதன்படி 2025 ஜனவரி முதல் அரச உத்தியோகத்தரின் ஆகக்குறைந்த சம்பளம் 55,000 ரூபாவாக இருக்கும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய ஆசிரியர்களை வெறும் தேர்தல் வாக்குறுதிகளால் ஏமாற்ற முடியாது எனவும், நடைமுறையில் நடைமுறைப்படுத்தக்கூடிய முறைமையின் படி முழு அரச சேவையிலும் உள்ள சம்பள முரண்பாடுகள் நீக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.