அடுத்த பருவத்திற்காக விவசாயிகளுக்கு இலவசமாக பண்டி உரம் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று (28) காலை தங்காலையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
திறைசேரி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.