கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லக்கதிர்காமம் பாலத்துக்கு அருகில் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சிலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதன்போது பாதிக்கப்பட்ட 10 சிறுவர்களும் மூன்று பெற்றோரும் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4 சிறுவர்களும், 6 சிறுமிகளும் மற்றும் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் என மொத்தம் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் செல்லக்கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.