திருமணத்திற்கு அப்பாலான உறவு காரணமாக தாயொருவர் தனது மூன்று வயது மகளை கொன்ற சம்பவம் இந்தியாவின் பீகாரில் பதிவாகியுள்ளது.
காஜல் குமாரி என்ற 25 வயதுடைய பெண்ணே இந்த கொலையை செய்துள்ளாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் தனது கணவரை பிரிந்து விவகாரத்து கொண்ட நபருடன் வாழ்வதற்கு திட்டமிட்டிருந்தாகவும், எனினும் மகளை அழைத்து வர வேண்டாம் என கள்ளக் காதலன் தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையிலேயே தாய் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர் ஓகஸ்ட் 23 ஆம் திகதி இரவு தனது மகளைக் கத்தியால் குத்தி, உடலை ஒரு சூட்கேஸில் அடைத்து அவரது வீட்டின் பின்புற முற்றத்தில் வீசியுள்ளார். மேலும் அவர் வீட்டில் இருந்த இரத்தக் கறைகள் உள்ளிட்ட ஆதாரங்களையும் அழிக்க முயன்றதாக குறித்த பெண் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குற்றம் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்வொன்றை பார்த்து அவர் இந்த கொலையை செய்ததாக மேலும் தெரிவித்துள்ளார்.
குற்றத்தை செய்ய பயன்படுத்திய ஆயுதமும் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பீகார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.