சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) அடுத்த சுயாதீனத் தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா போட்டியின்றி தெரிவானார்.
2019 இலிருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் கௌரவ செயலாளராகவும் 2021இ லிருந்து ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராகவும் பதவி வகிக்கும் ஜெய் ஷா, ஐசிசியின் தலைவர் பதவியை டிசம்பர் முதலாம் திகதி பொறுப்பேற்பார்.
சமகாலத் தலைவர் க்ரெய்க் பாக்லே, மூன்றாவது முறையாக பதவியேற்க முன்வராத நிலையில் அடுத்த தலைவர் பதவிக்கு ஜெய் ஷாவின் பெயர் மாத்திரமே பிரேரிக்கப்பட்டது.
இதனை அடுத்து அவர் போட்டியின்றி தெரிவானார்.
தலைவர் பதவிக்கு தெரிவானதை அடுத்துஇ உலகளாவிய ரீதியில் கிரிக்கெட்டை பரப்பச் செய்வதும் பிரபல்யம் அடையச் செய்வதுமே தனது நோக்கம் என ஜெய் ஷா குறிப்பிட்டார்.
குறிப்பாக லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கிரிக்கெட்டை இணைப்பதன் மூலம் அதன் வளர்ச்சிக்கு முக்கிய வாய்ப்பு உருவாவதாக அவர் கூறினார்.