Friday, August 29, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇறப்பர் செய்கைக்கு 4,000 ரூபா உர மானியம்

இறப்பர் செய்கைக்கு 4,000 ரூபா உர மானியம்

இறப்பர் செய்கைக்காக 4,000 ரூபாவை உர மானியமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி இந்த வாரத்தில் இருந்து உர மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

பல வருடங்களாக இறப்பர் செய்கை நடவடிக்கைகளுக்கு உரம் இடப்படவில்லை என இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனால் வருடாந்த இறப்பர் பால் விளைச்சல் 100,000 மெற்றிக் டன்னில் இருந்து 65,000 மெற்றிக் டன்னாக குறைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இறப்பர் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் 50 கிலோகிராம் உர மூட்டையின் விலையை 9,500 ரூபாவிலிருந்து 5,500 ரூபாவாக குறைக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles