ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) முற்பகல் நாரஹேன்பிட்டியில் உள்ள ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாய சங்கத் தலைமையகத்திற்குச் சென்று ராமன்ய நிகாயவின் மகாநாயக்க தேரர் அக்கமஹா பண்டித மகுலேவே விமலாபிதான தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் ஜனாதிபதி மகாநாயக்கர் மகா சங்கத்தினருடன் சிறிது நேரம் கலந்துரையாடியதுடன் நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் மகா சங்கத்தினருக்கு அறிவித்தார்.
அத்துடன் பிரிவேனா கல்வி தொடர்பான பிரச்சினைகள் புனித பூமி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டதுடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பி.க்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்கள் குறித்தும் ஜனாதிபதி மகாநாயக்க தேரருக்கு அறிவித்தார்.