Saturday, October 4, 2025
23 C
Colombo
அரசியல்சஜித் ஒரு போதும் ரணிலை பின் தொடர மாட்டார் - திஸ்ஸ அத்தநாயக்க

சஜித் ஒரு போதும் ரணிலை பின் தொடர மாட்டார் – திஸ்ஸ அத்தநாயக்க

சஜித் ஒரு போதும் ரணிலை பின் தொடர மாட்டார் என்றும் எமது அரசாங்கத்தின் கீழ் அமைச்சரவையில் 25 பேர் மட்டுமே இருப்பார்கள் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ரணில் தோற்கடிக்கப்பட்டால் நாடு மீண்டும் அதலபாதாளத்தில் விழும் என சிலர் கூறி நாட்டு மக்களை பயமுறுத்தியுள்ளதாகவும், ஆனால் அது அவ்வாறு இல்லை எனவும், சஜித் பிரேமதாசவிற்கு முறையான திட்டம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க கூறியதையும் செய்வதையும் அப்படியே பிரதியெடுத்து மக்களுக்கு சஜித் பிரேமதாச வாக்குறுதிகளை வழங்குவதாக குற்றம் சுமத்துவது அபத்தமான குற்றச்சாட்டு என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles