இந்திய மீன்பிடி படகு ஒன்று கச்சத்தீவு அருகில் விபத்துக்குள்ளானதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவுக்கு அருகில் இந்திய கடற்பரப்பில் 4 பேருடன் பயணித்த படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் 2 பேர் காணாமல் போயுள்ளதுடன், இருவர் கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.