கடவுச்சீட்டுகள் குறைவாக இருப்பதால், மிக அவசரமாகத் தேவைப்படுவோர் மட்டும் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இலத்திரனியல் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளின் கையிருப்பைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் அவை பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.