Thursday, January 16, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு776 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

776 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

புத்தளம் – கற்பிட்டி, கப்பலடி களப்பு பகுதியில் இருந்து ஒரு தொகை பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 24 ஆம் திகதி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் போது, சந்தேகத்திற்கு இடமாக கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 24 உர மூடைகளை கடற்படையினர் பரிசோதனை செய்தனர்.

குறித்த 24 உர மூடைகளிலும் 776 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகளின் போது கடத்தல்காரர்கள் இந்த பீடி இலைகள் அடங்கிய உரமூடைகளை கடலில் தள்ளிவிட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 776 கிலோ கிராம் பீடி இலைகள் அடங்கிய 24 உரமூடைகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் வைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles