அலுவலக ரயிலின் இயந்திரக் கோளாறு காரணமாக பிரதான ரயில் பாதை மற்றும் வடக்குப் பாதையில் இயங்கும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்தார்.
ரம்புக்கனையில் இருந்து பாணந்துறை நோக்கிச் செல்லும் ரயிலில் இன்று (26) காலை ரம்புக்கனை ரயில் நிலையத்தில் வைத்து இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக பல அலுவலக ரயில்கள் காலை நேரத்தில் தாமதமாக இயக்கப்பட்டதாக அவர் கூறினார்.