தெதுரு ஓயாவில் நேற்று (25) நீராடச் சென்று காணாமல் போன தாய் மற்றும் மற்றைய குழந்தை ஆகியோரின் சடலங்கள் இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த சடலங்கள் குருநாகல் – போகமுவ மஹா மூகலனாய – பெரஹேனவத்த பிரதேசத்திலிருந்து மீட்கப்பட்டன.
காணாமல் போயிருந்த குழந்தைகளில் ஒருவரின் சடலம் நேற்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
33 வயதான தாய், 07 வயது மற்றும் 05 வயதுடைய இரண்டு மகன்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.