ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலமான செயற்பாட்டாளர்கள் குழு ஒன்று ஆதரவு வழங்கியுள்ளது.
ஆதரவு தெரிவிக்கும் குழுவினர் இன்று (26) காலை மல்பாறையில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்திற்கு சென்று இதனை அறிவித்தனர்.
இதன்படி, களுத்துறை தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம அமைப்பாளராக இருந்த முன்னாள் பிரதி அமைச்சர் பிரியங்கனி அபேவீர, கம்பஹா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம அமைப்பாளர் டயஸ் பண்டாரநாயக்க, கொலன்னா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம அமைப்பாளர் சாந்த ரத்நாயக்க உட்பட பலர் இவ்வாறு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.