பாணந்துறை – ஹொரண வீதியின் பின்கொடுவ சந்தியில் இன்று (26) கெப் வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அலோபோமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிள் இரண்டு பகுதிகளாக உடைந்து காணப்பட்டது.
ஹொரணையில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் எதிர்திசையில் பயணித்த கெப் வண்டியின் முன்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் அருக்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கெப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அலோபோமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.