ஹட்டன் – ஷெனன் தோட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 4 பேர் குளவி தாக்குதலுக்கு இலக்காகி வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (26) இத்தோட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மரத்தில் கட்டியிருந்த குளவி கூட்டை கிளறிவிட்டுள்ளதுடன், இதனால் அவர்களை குளவிகள் தாக்கியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், ஹட்டன் – ஷெனன் தோட்டத்தில் குளவி கொட்டியதில் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வட்டவளை பிராந்திய வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.