Friday, October 10, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுகிறது.

இதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் உரியச் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும் எனச் சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் சுமார் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இரத்தினபுரி, காலி, கேகாலை, மாத்தறை, களுத்துறை, மொனராகலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் அதிக ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் தசை வலி, தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால், முறையான மருத்துவ ஆலோசனையைப் பெறுவது கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles