நாட்டை அனுபவமற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி ரணில் போன்ற அனுபவமுள்ள ஒருவரிடம் இந்த நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் தாம் மக்களிடம் கேட்டுக் கொள்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேற்கு கொழும்பில் ‘புலுவன் ஸ்ரீலங்கா’ கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நாடு ரணிலின் முறையான வேலைத்திட்டத்தின் கீழ் இந்தளவுக்கு மீண்டுள்ளதாகவும் மீதியை மீட்பதற்கு மேலும் 05 வருடங்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.