பசறை, மடுல்சீமை கெரண்டிஎல்ல பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்றில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் கெரண்டிஎல்ல மடுல்சீமை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவரென தெரியவந்துள்ளது.
மடுல்சீமை கெரண்டிஎல்ல பகுதியில் நேற்று (22) குறித்த பெண் தனியார் தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்த போது, தேயிலை செடிக்குள் இருந்து பாம்பு தீண்டியுள்ளது.
இதனையடுத்து அவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (23) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரி தெரிவித்தார்.
பாம்பின் விஷம் உடலில் பரவியமையே மரணத்திற்கான காரணம் என மரண பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
குறித்த பெண்ணின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலை அதிகாரி தெரிவித்துள்ளார்.