Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை மாணவர்களை வன்புணர்ந்த அதிபர் கைது

பாடசாலை மாணவர்களை வன்புணர்ந்த அதிபர் கைது

கதிர்காமம், கோதமிபுர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் கதிர்காமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

தரம் 9 இல் கல்வி கற்கும் சிறுவர்கள் சிலர் சந்தேகத்திற்குரிய அதிபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

9ஆம் தரத்தில் கல்வி கற்கும் வேளையில் அதிபர் தன்னை 8ஆம் வகுப்புக்கு தரமிறக்கியதாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவன் தனக்கு நேர்ந்த துஷ்பிரயோகம் குறித்து பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தம்முடன் உடலுறவு கொள்ளுமாறு அதிபர் பல தடவைகள் பரிந்துரைத்த போதும் தாம் மறுத்ததாகவும், ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் அதிபர் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுவன் பொலிஸில் தெரிவித்துள்ளார்.

சம்பவத்திற்கு முகங்கொடுத்த சிறுவன் இது தொடர்பில் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பொலிஸ் விசாரணையில் பாடசாலையின் மேலும் பல சிறுவர்களும் அதிபரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, சந்தேகத்தின் பேரில் அதிபரை பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், சந்தேகத்திற்குரிய அதிபர் இன்று (23) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

எவ்வாறாயினும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்கள் தற்போது மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles