Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதொடர் விபத்துக்களை ஏற்படுத்திய சாரதி திடீர் மரணம்

தொடர் விபத்துக்களை ஏற்படுத்திய சாரதி திடீர் மரணம்

மூன்று விபத்துக்களை ஏற்படுத்திய வேன் சாரதி ஒருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்த சம்பவம் பிலியந்தலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

குறித்த சாரதி பின்ஹேன சந்திக்கு அருகில்மூன்று வாகனங்கள் மீது தொடர்ச்சியாக மோதியுள்ளதுடன், பின்னர் அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாவ, தீபாங்கொட பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கொட்டாவையில் இருந்து மத்தேகொட நோக்கி பயணித்த குறித்த வேன், மற்ற வாகனங்களை முந்தி செல்ல முற்பட்ட போது, ​​முதலில் சொகுசு ஜீப், பின்னர் மினிவேன் மற்றும் லொறி மீது மோதியுள்ளது.

விபத்துக்கு பின்னர் இந்த வேன் நின்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன் பின்னர் சிறிது நேரத்தில் சாரதி சுகயீனமடைந்து நோயாளர் காவு வண்டியில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles