யுனைடட் பெற்றோலிய நிறுவனம் நேற்று (22) இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதன்படி, யுனைடட் நிறுவனம் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளவுள்ளது.
இலங்கையில் எரிபொருள் சந்தையில் நுழையும் நான்காவது நிறுவனம் .இதுவாகும்.