Monday, May 12, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டு6 மாதங்களுக்கு முன் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

6 மாதங்களுக்கு முன் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குரங்கெத்த கோணப்பிட்டிய, சீனாக்கொலை தோட்டத்தில் பெண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.

அடர்ந்த காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்படப்டுள்ளது.

36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான சிவலிங்கம் தர்ஷனி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றுமொருவர் பிரதேசத்தை விட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மந்தாரநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் அக்ரபத்தனை பகுதியில் அரச வைத்தியசாலையில் தாதியராக பணிபுரிந்து வந்து நிலையில் கோணப்பிட்டிய பிரதேச வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் காணாமல் போயுள்ளதாக அவரது கணவரால் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை நுவரெலியா பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து கண்டி பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின் சந்தேகநபர் அளித்த வாக்குமூலத்துக்கு அமைய பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து புதைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தங்க நகைகள் பன்வில பகுதியிலுள்ள வங்கி ஒன்றில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles