Tuesday, August 5, 2025
26.7 C
Colombo
செய்திகள்உலகம்மருந்து நிறுவனமொன்றில் பாரிய வெடிவிபத்து: 17 பேர் பலி

மருந்து நிறுவனமொன்றில் பாரிய வெடிவிபத்து: 17 பேர் பலி

இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மருந்து நிறுவனமொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றதுடன், இதில் 33 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், பலர் காணாமல் போயுள்ளதுடன் அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles