இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் பத்லாபூர் நகரில் முன்பள்ளி சிறுமிகள் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான புகாரையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
3 மற்றும் 4 வயதுடைய இந்த இரண்டு சிறுமிகளும், முன்பள்ளியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 23 வயதுடைய தொழிலாளி ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இரண்டு சிறுமிகளில் ஒருவர் இதுபற்றி தனது பெற்றோருக்கு தெரிவித்ததையடுத்து, அதனை கேட்டு கோபமடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் முன்பள்ளிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் பத்லாபூர் ரயில் நிலையத்திற்கு சென்ற போராட்டக்காரர்களை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.