Tuesday, July 29, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாமியார் கொலை: மருமகன் கைது

மாமியார் கொலை: மருமகன் கைது

கலபிடமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெவங்கம பகுதியில் தனது மாமியாரை கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணத் தகராறு காரணமாக குடும்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது சந்தேக நபர் தனது மனைவியின் தாயாரை கல்லால் தாக்கியுள்ளார்.

இதன்போது பலத்த காயமடைந்த குறித்த பெண் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வீட்டிலிருந்த மனைவி மற்றும் மகள் மீதும் கூரிய ஆயுதத்தினால் சந்தேக நபர் தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கரவனெல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 44 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கலபிடமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles