போதைப்பொருள் கடத்தல்காரரான குடு சலிந்துவின் சகாவான ‘பியுமா’ எனப்படும் பியும் ஹஸ்திக எதிர்வரும் செப்டம்பர் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அத்துடன், சந்தேகநபரின் கணக்குகள் ஊடாக பெருமளவிலான பணம் புழக்கத்தில் உள்ளதால் விரிவான விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.