Friday, March 14, 2025
25.6 C
Colombo
செய்திகள்உலகம்பாகிஸ்தான் பாராளுமன்றில் எலிகளைப் பிடிக்க 1.2 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பாகிஸ்தான் பாராளுமன்றில் எலிகளைப் பிடிக்க 1.2 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பாகிஸ்தான் பாராளுமன்ற வளாகத்தில் எலிகளின் தொல்லையால் அதிகாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2008 ஆம் ஆண்டுக்கான சந்திப்புப் பதிவுகளைப் பார்க்குமாறு உத்தியோகபூர்வ குழு கேட்டதை அடுத்து, அதனுடன் தொடர்புடைய பதிவுகளைத் தேடும் போது அவற்றின் பல பதிவேடுகள் எலிகளால் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த எலி தொந்தரவு காரணமாக அவற்றை கட்டுப்படுத்த வேட்டையாடும் பூனைகளைப் பயன்படுத்த பாகிஸ்தான் அரசாங்கம் அதன் பாதீட்டில் 1.2 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற வளாகத்துக்குள் எலிகள் நுழையக்கூடிய இடங்களை சுற்றி வலை வீசி இது தொடர்பான பணம் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், அந்த வளாகங்களில் பூச்சிக் கட்டுப்பாட்டை முன்னெடுக்க தனியார் நிறுவனங்களைத் தொடர்பு கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles