தலதா அத்துகோரளவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமாக இருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கருணாரத்ன பரணவிதானவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ஐக்கிய குடியரசு முன்னணியின் அரசியல் குழு தலைவராக அவர் பணியாற்றி வருகிறார்.
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று (21) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.