Thursday, January 16, 2025
25.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெஹெலியவின் மனு தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கெஹெலியவின் மனு தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணையின் முடிவில் தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு தொடர்பான ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) கால அவகாசம் வழங்கியுள்ளது.

இந்த மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிசங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சட்டமா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, இது தொடர்பான மனுவுக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு திகதி வழங்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles