Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகர்ப்பிணி பெண் மரணம்: நால்வர் பணியிடை நீக்கம்

கர்ப்பிணி பெண் மரணம்: நால்வர் பணியிடை நீக்கம்

மன்னார் பொது வைத்தியசாலையில் பெண் ஒருவர் இரத்தம் கசிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் உட்பட நால்வரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சு அவர்களின் சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி பெண், அதிக குருதி போக்கு காரணமாகக் கடந்த மாதம் 28ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

எவ்வாறாயினும் அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியர்கள் அவருக்குரிய முறையில் சிகிச்சையளிக்கவில்லை எனவும் வைத்தியர்களின் அசமந்த போக்கின் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய ஏலவே, நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு தாதியர்களுக்கும் இரண்டு குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் இவ்வாறு பணியிடை நீக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவருக்கும் பணியிடை நீக்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles