இலங்கை குரங்கு காய்ச்சல் குறித்து சிறந்த தயார் நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரஃப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்இ மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய்க்கான தயார்நிலை கடந்த ஆண்டுகளை விட இப்போது மிகவும் சிறப்பாக உள்ளது எனவும் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமைச்சு முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.