வென்னப்புவ பிரதேசத்தில் வாகன திருத்தும் நிலையம் ஒன்றில் 04 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட 4 நவீன பேருந்துகள் இன்று (20) காலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வென்னப்புவ லேக் வீதியில் அமைந்துள்ள இந்த வாகன திருத்தும் நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர் பேருந்துகளுக்கு தீ வைத்து விட்டு ஓடுவது அருகில் இருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
இந்த தீ விபத்தில் பழுதுபார்ப்பதற்காக அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று முற்றாக எரிந்து நாசமானதுடன், தீயினால் சுமார் 3 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.