வாக்காளர் ஒருவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, வாக்களார் ஒருவருக்கு 109 ரூபாவை தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் செலவிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்படும் என அறிவித்திருந்த நிலையில், இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.