யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் மூன்று மாத பெண் குழந்தையொன்று நேற்று (19) தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் அவர் திடீரென மயங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை சாவகச்சேரி வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.