எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு 7 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்குகளுக்கு தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறு தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்ற 07 இலட்சம் பேரில் பொலிஸ், ஆயுதப்படை மற்றும் அரச அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.
தபால் மூல வாக்களிப்பு செப்டம்பர் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.