க்ளப் வசந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் ‘க்ளப் வசந்த’ உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 11 சந்தேகநபர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கடுவெல நீதவான் நீதிமன்றில் இன்று (20) ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்கள் 11 பேரையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.